Kanagaraj / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது நுகர்வோரின் பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் உணவு மற்றும் பான வகைகளை விற்பனை செய்த 15 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிரேஸ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சோமசிறி தெரிவித்தார்.
ஏப்ரல் ஆறாம் திகதி முதல் மே மாதம் எட்டாம் திகதி வரையான காலப்பகுதியில் 'உணவு மாதம்'கடைபிடிக்கப்படுவதையிட்டு இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பரிசோதகர்கள் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தனர்.
உணவகங்கள், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள், இரவு உணவு விற்பனை நிலையங்கள் என இதுவரை 80 நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
காலாவதியான உணவு மற்றும் பான வகைகள், 'லேபல்;' ஒட்டப்படாத உணவு வகைகள், தர நிர்ணயம் செய்யப்படாத பொதியிடப்பட்ட உணவு வகைகள் என பல்வேறு உணவு வகைகள் சோதனை நடவடிக்கையின் போது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட சில பொருட்களை அழித்ததாகவும், வர்த்தகர்கள் சிலருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .