Super User / 2012 ஒக்டோபர் 04 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா, கே.என்.முனாஷா)
வடக்கு கிழக்கில் பிரச்சினை இருக்கிறது. அதனை தீர்க்க வெளிநாடுகள் அவசியமில்லை என கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் தவைரான கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
சில நாடுகள் இப்பிரச்சினையில் சுய இலாபம் தேட முயற்சிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் கூரே மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"சமயங்கள் என்ற அத்திவாரத்தில் குறிப்பாக பௌத்த சமய அடித்தளத்தில் கட்டியொழுப்பப்பட்ட இலங்கையின் கலாச்சாரம், பொருளாதார நலனுக்காக மாற்றப்பட கூடாது. பொருளாதார அபிவிருத்திக்காக கலாச்சாரமும் சுற்றுச்சூழலும் அழியவிடப்படுமாயின் இலங்கை ஆசியாவின் கழிவு கொட்டும் இடமாகிவிடும். அபிருவித்தி திட்டங்களை வரையும் போது உலக வங்கி போன்ற நன்கொடை நிறுவனங்களின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றக்கூடாது.
எம்மை பிச்சை எடுக்க வைக்கவே அவர்கள் எமக்கு கடன் தருகின்றனர். இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கும் நோக்கில் சமூகங்களிடையே மோதவை ஏற்படுத்த முயலும் வேறு சர்வதேச சக்திகளும் உள்ளன
இன்று இந்த சக்திகளினால் உருவாக்கப்பட்ட பல பொம்மை அரசாங்கங்கள் உள்ளன.
தமது சமய பிரிவினுள் கத்தோலிக்கர்களை கவர்ந்திளுக்க முயலும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் பற்றி குருமார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . தத்தம் சமுதாயங்களுடம் நெருங்கி வேலை செய்ய வேண்டும்.எல்லோரும் தமது சமயத்தை பற்றி குறிப்பிடுகின்றனர். ஆனால் சமயத்தை பின்பற்றுகிறோமா என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
ஆன்மீகத்தை பின்பற்றும் போதே மாத்திரம் நற்பண்புகள் வெளிப்படுகின்றன. நீர்கொழும்பில் கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். பங்குப் பிரிவிற்கும் மக்களுக்கும்; இடையில் நெருக்கம் அதிகரிக்க வேண்டும். கத்தோலிக்க மக்கள் ஏனைய மதத்தவர்கள் தொடர்;பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நீர்கொழும்பு நகரை அண்மித்ததாக விமான நிலையம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் போன்றவை உள்ளன. நகரில் கருக்கலைப்பு, விபசாரம், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படல் ஆகியன அதிகரித்துள்ளன. இவை தொடர்பாகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் தொடர்பாகவும் இந்த வருடம் கவனம் செலுத்வுள்ளோம்.
நகரின் பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள எமது மதஸ்;தளம் முன்பாக குப்பை போடப்படுகிறது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இந்த பிரதேச மாகாண அரசியல்வாதிக்கு உத்தரவிட்டுள்ளார். ஆயினும் ஒரு வருடமாகியும் இன்று வரை அங்கு குப்பை கொட்டப்படுகிறது.(படங்கள்:பிரதீப் பத்திரன)




53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago