Kanagaraj / 2015 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் அகற்றப்பட்டன.
நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கான தேர்தல் சட்டவிதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான கட்டவுட்களையும் கொடிகளையும் பொலிஸார் (இன்;று ) அகற்றினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதிக்கு குறுக்காக கட்சி அமைப்பாளர்களினார் அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும், பெனர்களையுமே பொலிஸார் அகற்றினர்.
நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்படடிருந்த பாரிய அளவிலான பெனர் தெரடர்பாக பொலிஸாருக்க் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சரும் வேட்பாளருமான சரத்குமார குணரத்ன இதுதொடர்பாக தமது எதிர்ப்பை பொலிஸாரிடம் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.
கட்சியின் தலைவர் ஒருவர் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்ள வரும்போதே வீதிக்கு குறுக்காக அலங்காரங்களை செய்ய முடியும் என்ற தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டதாக பொலிஸாரின் மூலமாக அறிய முடிந்தது.



3 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago