Super User / 2012 மார்ச் 13 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
35 வீடுகளில் பல இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்களை திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்சன தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் நகைகள் மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு, கதிரானை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான டப்ளியூ.ஏ. அஜித் நிரோசன் என்பவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த நபர் 1999ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் ஐ.ஆர்.சி பிரகடனப்படுத்தப்பட்டவர் எனவும் போதைவஸ்து மற்றும் சூதாட்டம் ஆகியவற்றிற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை, மீரிகமை ஆகிய பிரதேசங்களிலுள்;ள வீடுகள் திருடியுள்ளார். பின்னர் திருடப்பட்ட பொருட்களை கொழும்பு, நீர்கொழும்பு, பாலத்துறை போன்ற பிரதேசங்களில் விற்பனை செய்து பெற்ற பணத்தை கொண்டு போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்ப்பட்டுள்ள சந்தேக நபருடன் இணைந்து செயற்பட்ட மற்றுமொரு ஒரு சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி சுபாஷ் பிரியதர்ஷன தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் ஆலோசனையின் படி குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்ஷனவின் வழிகாட்டலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர்களான சாமர விக்ரமசிங்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிஸ்மி, பெரேரா, சத்துரு ரங்க ஆகியோரை கொண்ட குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
.jpg)
27 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
3 hours ago