Super User / 2012 ஜனவரி 04 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கே. என்.முனாஷா )
வீடுகளில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிய நபரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ இன்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், நீர்கொழும்பு தளுபத்தை –தெனியாய பிரதேசத்தை சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து நகை, பணம் கமரா, கைகடிகாரம், மடி கணணி மற்றும் செல்லிட தெலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இரவு வேளைகளில் வீட்டில் ஒருவரும் இல்லாத வேளையிலேயே இவர் திருட்டு செயலை புரிந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் அலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி ஆனந்த பெரோரா தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
21 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago