2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேற்றல் தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேறாத மக்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை பளை மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

பச்சிலைப்பள்ளி மேற்கு மக்கள் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறாத பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர், நலன்விரும்பிகள் ஆகியோரை இதில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் கோயில்வயல், இத்தாவில், சங்கத்தார்வயல், கச்சார்வெளி, இயக்கச்சி, அல்லிப்பளை, அரசர்கேணி, இந்திராபுரம், முகமாலை, செல்வபுரம், கிளாலி, சதாபுரம் ஆகிய கிராமங்களில் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .