2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் வாகண சாரதி உட்பட நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மருதனார் மடம் காங்கேசன்துறை வீதியில் இராமநாதன் கல்லூரிக்கு அண்மையாக பகல் 10.45 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது. சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியும் வான் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து சுன்னாகம் நோக்கி வந்த பஸ் ஆகியன மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சுன்னாகத்தில் இருந்து சென்ற தனியார் ஒப்பந்தகாரரின் வான், வீதியில் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதில் மோதியுள்ளது. அத்துடன்
பஸ் வண்டியுடன் மோதியுள்ளது.
 
இதனால் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .