2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கச்சாய் ஊடான பஸ் சேவையை மீளஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

தென்மராட்சி, கச்சாய் பகுதியில் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்துச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கிவருகின்றனர்.

கச்சாய் பகுதியிலுள்ள மாணவர்கள், உத்தியோகத்தர்கள், பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயணிப்போருக்கான போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொடிகாமத்திலிருந்து கச்சாய் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிக்கின்ற 809 ஆம் இலக்க இ.போ.ச. பஸ் ஒன்று சேவையில் ஈடுபட்டுவந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பயனடைந்தனர்.

ஆயினும் கடந்த 6 மாதங்களாகக் குறித்த பஸ் சேவை  திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் சீரான போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாமல் கச்சாய் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை  பருத்தித்துறையிலிருந்து  கொடிகாமம் ஊடாக கச்சாய்வரையும்  759 ஆம் இலக்க பஸ் சேவையிலீடுபட்டு வந்தது. அதுவும் பலகாலமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இப்பகுதி மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்க கச்சாய் ஊடான பஸ் சேவையை மீளஆரம்பிக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .