Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சங்கவி)
யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் சுகாதார நெருக்கடிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரடியாகச் சென்று ஆராய்ந்தார்.
இன்று காலை 6.30 மணியளவில் வைத்தியசாலைக்குத் திடீரென விஜயம் செய்த அமைச்சர் ஒவ்வொரு விடுதியாகச் சென்று பார்வையிட்டதுடன் அங்கு சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்பட்ட மலசலகூடங்கள் குறித்து அந்த விடுதிகளின் பொறுப்பதிகாரிகளிடம் விளக்கம் கோரினார்.
இதேவேளை, விடுதியில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளர்களுக்கு வழங்குவதற்காக உணவு சமைக்கப்படும் வைத்தியசாலையின் சமையலறையைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கு நிலவிய சுகாதாரச் சீர்கேடு குறித்து அதன் பொறுப்பதிகாரிகளுக்கு நீண்ட அறிவுறுத்தலையும் வழங்கினார்.
தொடர்ந்து வைத்தியசாலைப் பணிப்பாளரைச் சந்தித்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது, சிற்றூழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறையே வைத்தியசாலையில் சுகாதார வேலைகளை உரியமுறையில் மேற்கொள்ள முடியாமல் உள்ளமைக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டது.
இதற்குத் தான் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் அமைச்சருடன் வருகைதந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago