2025 ஜூலை 19, சனிக்கிழமை

யுத்தகாலத்தில் இறுதி நேரத்தில் சரணடைந்தவர்கள் ஏழைகளே! – டி.யூ.

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யுத்தகாலத்தில் இறுதி நேரத்தில் சரணடைந்தவர்களில் நூற்றுக்கு 80 வீதத்தினர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது கடமையாகும் என்று தெரிவித்தார் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ. குணசேகர.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணவரை இழந்தோருக்கு உதவி வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ். செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அடிமட்டத்தில் உள்ளவர்களின் வாழ்வியலைக் கட்டியெழுப்புவதே சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் முக்கிய நோக்கமாகும். அவர்களே யுத்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக இத்திட்டம் முன்னெடுக்கப்படும்.- என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X