Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 26 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலுள்ள மக்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
யாழில் தொடரும் இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேற்படி அரசியல்வாதிகள் முன்வைத்து வருவதால் மக்கிளிடையே மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் யாழ். மக்களுக்கு இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கை உள்ளது என்றும் அதனால் அவர்களும் இராணுவத்தினரும் நல்லுறவைப் பேணி வருவதாகவும் கட்டளைத் தளபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் சில அரசியல் தலையீடுகளே தொடர்புபட்டுள்ளன என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றவாளிகளை வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க மேலும் கூறினார். Pix By :- Kushan Pathiraja
Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 08:39 PM
உலகத்தில் அமைதியாய் வாழ்வதே ஒரு மனிதனுக்கு அழகு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago