2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

பூம்புகார் மீனவர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட அனுமதி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இன்று திங்கட்கிழமை இராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.

அண்மையில் மீள்குடியேறிய மீனவக் குடும்பங்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே,  இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரியாலை கரையோரப்பகுதி இராணுவத்தினர் தெரிவித்தனர்.

கடற்கரையோரங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கடற்றொழிலாளர்கள் தங்களது தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .