2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

இலங்கை அணியின் வெற்றிக்காக யாழில் விசேட பூஜை வழிபாடுகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண அரையிறுதி இறுதி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டியும்   இலங்கை அணி வீரர்களுக்கு ஆசி வேண்டியும் யாழ். தேவாலயங்கள்,  நல்லூர் கந்தசுவாமி கோவில், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில் ஆகியவற்றில்  இலங்கை கிரிக்கெட் அணியின் யாழ். ரசிகர்கள்  இன்று வியாழக்கிழமை காலை முதல் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். ஆரியகுள வீதியில் அமைந்துள்ள நாகவிகாரையில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பல பதாதைகளும் கட்டப்பட்டு வீதியோரங்களில் அகலத்திரைகள் அமைக்கப்பட்டு வருவதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .