Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,கிரிசன்)
ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் தந்தை செல்வா ஆற்றிய பணிகள் வரலாற்றில் அழிக்க முடியாத சுவடுகளை தாங்கியுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசன் அடிகளார் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற தந்தை செல்வாவின் பிறந்ததின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'தந்தை செல்வாவின் கொள்கைகளில் பற்றுதியுடன் எமது தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது பாடுபடும். தமிழர்களுக்கான ஒரு தீர்வுத் திட்டம் இறுதி வடிவம் எடுக்கும் வரையும் தமிழர்களுடைய ஜனநாயகப் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கும்.'
'தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைகளுடன் வாழக்கூடிய ஒரு சூழல் உருவாக்குவது இதில் தந்தை செல்வாவுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய பணியாக இருக்கும்
தமிழர்கள் இலங்கை மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஆரம்பத்திலேயே வித்திட்டவர் தந்தை செல்வா ஆவார்.
இந்த அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்; இடையிலான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் இதயசுத்தியுடனும் பற்றுதியுடனும் இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் தந்தை செல்வா நினைவுக்குழுவின் பொருளாளருமான பேராசிரியர் க.சத்தியசீலன்,
தந்தை செல்வா தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் யாழ். மாவட்டத்திலும் சரி வடக்கு, கிழக்கிலும் சரி 80 வீதத்திற்கும் குறையாத மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இன்று இத்தகையதொரு நிலைமை இல்லை. தற்போதைய தேர்தல்களின்போது 20 வீதம் முதல் 22 வீதம் வரையான மக்களே வாக்களிக்கின்றனர்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவுகள் காணப்பட்டன. இதனால் மக்கள் தேர்தல்களில் தமது வேட்பாளர்களுக்காக வாக்களித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago