A.P.Mathan / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளராக கந்தசாமி கேதீசன் இன்று சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம முகாமையாளராகவிருந்த க.கணேசபிள்ளை பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து அவரது இடத்துக்கு கேதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கைப் போக்குவரத்து சபையில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதம பிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்ட பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர் தன்னை இந்த பதவிக்கு தெரிவு செய்தவர்களுக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இலங்கைப் போக்குவரத்து சபையின் வளர்ச்சிக்காக தாம் பாடுபடப்போவதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு வடபிராந்தியத்திலுள்ள யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, மன்னார், வவுனியா ஆகிய பிராந்தியங்களில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைகள் இணைந்து லீசிங் முறையில் தலா இரண்டு பேருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளோம். இதன் மூலம் வருமானத்தை பெருமளவில் அதிகரிக்கமுடியும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
26 minute ago
38 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
49 minute ago
2 hours ago