2021 ஜூலை 26, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவுக்கு நிதியுதவி

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவுக்கு சங்கானை ஹற்றன் நஷனல் வங்கியனால் சுமார் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான உளவளத்துனை ஆலோசனை மையத்திற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.


இந் நிதி,   நாளை ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். போதனா வைத்தியசாலை புற்று நோய் வைத்திய விடுதியில்,  புற்று நோய் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி க.ஜெயக்குமாரிடம் கையளிக்கப்படவுள்ளது.

யாழ். புற்று நோய் வைத்திய நிபுணர்  சங்கானை ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

புற்று நோய் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இந் நிதியுதவி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .