2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யாழில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்,கவிசுகி)

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஈவினைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம்  ஜேந்திரா (வயது 38) என்ற குடும்பஸ்தரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.  

புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியில் மேற்படி குடும்பஸ்தர் வெட்டுக்காயங்களுடன் மரணமடைந்து காணப்பட்ட நிலையில் சடலமாக அவரின் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இவரது சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .