George / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, விசேட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் அதன்மூலம் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய, செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையப் பிரிவுக்குள் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனரா என அவரிடம் வினாவியபோதே அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், யாழ் பொலிஸ் பிரிவில் அண்மைக்காலங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் பொதுமக்கள் 021 2222222 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல் தரமுடியும்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வங்கியில் பண வைப்பிலிட செய்து மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ள. அவை தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். சரியான தகவல்களைப் பெற்றும் சரியான முறையில் வெளிநாட்டுக்கு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
13 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
32 minute ago