2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடிப் பயிற்சிக் கல்லூரிக்கு 25 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடம்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ்ப்பாணத்திலுள்ள மீன்பிடிப் பயிற்சிக் கல்லூரிக்கு 25 மில்லியன் ரூபா செலவில் புதிய நிரந்தரக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பானியத் தொண்டு நிறுவனமான "ஜெய்க்கா" வழங்கவுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள கடலோட்டு இயந்திரவியல் கல்லூரியில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கும் வகையில் கடலியல் வளாகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது என ஜெய்க்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்கடலியல் வளாகம் அமைக்கப்படுவதன் மூலம், சிறுத்தீவினை அண்டிய கடற்பகுதிகளில் உள்ள பாசி, கண்டல் தாவரங்களைப் பாதுகாக்கவும், அருகிவரும் உயிரினங்களான  கடலட்டை முதலான கடல்வாழ் உயிரினங்களைப் பேணவும் முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடலியல் வளாகத்தை அமைக்க 100 மில்லியன் ரூபா வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .