2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அபாயகரமான சூழல் உருவாகப்போகின்றது

Freelancer   / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆகக் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள்தான். தங்களுடைய உரிமைகளை கேட்டு, அவர்கள் போராடிய ஒரே காரணத்துக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

தமது வாழ்வை இழந்தார்கள். இதைவிட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பாரதூரமானது. இதனால் பலர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்று புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா செந்தில்வேல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து ​கூறியதாவது:

ஆரம்பத்தில் இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சிலர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த மோசமான நிலைமை மாறுவதற்கு முன்பே, அதே பயங்கரவாத தடைச் சட்டத்தை போன்ற, அதைவிட இன்னும் மோசமான சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கொண்டு வந்து, நிறைவேற்றுவதற்கு முன் வந்திருக்கின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.

இந்தச் சட்டத்தில் இருக்கின்ற விடயங்களை பார்க்கின்ற பொழுது, சாதாரணமாக கூட்டம் கூடினால் கூட, அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் கூட, அது பயங்கரவாதமாக கருதப்பட்டு, அந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது, தொழிற்சங்கங்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராட முடியாது; வேலை நிறுத்தங்களை செய்ய முடியாது; பகிஸ்கரிப்புகளை செய்ய முடியாது.

ஞாயம் கேட்கின்ற தொழிற்சங்கங்கள், மாணவர்களை இந்தத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அடைக்கக் கூடிய ஓர் அபாயகரமான சூழல் எதிர்காலத்தில் வளரப்போகின்றது. எனவேதான், இந்தச் சட்டம் கொண்டுவரக் கூடாது என்கின்றோம். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X