Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 மார்ச் 07 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆளுநர் செயலகத்தில் இன்று (07) சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பில் ஆளுநர் விளக்கமளித்ததுடன் இந்த மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் இரு நாட்டு தூதுவர்களிடமும் கோரிக்கை விடுத்தார். அத்துடன் வடமாகாணத்தை கட்டியெழுப்ப வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நிபுணர்களின் தேவைகள் குறித்தும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .