2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கத்தின் கைக்கூலிகளாக மாறியது கூட்டமைப்பு’

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நசுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் இந்த அரசாங்கத்தின் கைக்கூலிகளாக, கூட்டமைப்புச் செயற்படுவதாக, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செஞ்சோலை படுகொலை நினைவு நாள் நிகழ்வு, புதுக்குடியிருப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனுக்கு எதிராக, உண்மைக்கு முரணாண வழக்கு ஒன்று கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், கொழும்புக்குச் சென்று வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள் என்றால், அதற்கான காரணம், தாங்கள் விரும்பியத் தீர்ப்பு, கொழும்பில் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதற்காகவே ஆகுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த அரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசம் அங்கிகரிப்பதற்காக கடுமையாக உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை, அரசங்கம் முடக்க முற்படுகின்ற இத்தருணத்தில், அந்த வேலையை கூலிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு முன்னெடுப்பதற்கான காய்நகர்த்தலை அரசாங்கம் செய்து வருகிறதென, அவர் மேலும் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .