Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 08 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான பின்வரும் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு - அல்லைப்பிட்டியில், 7 பரப்பு காணியும் ஜே/11 பிரிவு - மண்கும்பானில், 4 பரப்பு காணியும் அதேபோல் புங்குடுதீவு - வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளும், கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்பதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், இன்று காலை 9.30 மணியளவில், அவ்விடத்துக்கு வருகை தந்தனர்.
இதன் போது, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர், திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி, எதிர்ப்பு தெரிவித்ததால், காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பு எதிர்ப்பு முயற்சியில், பாராளுமன்ற உறுப்பினர்கள், தீவகப் பகுதி மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago