Niroshini / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களையும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன், நேற்று (20) மாலை உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் (19) , இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கை கடற்படை படகுடன் மோதுண்டு இந்திய மீனவர் படகு விபத்துக்கு உள்ளாகி இருந்தது. இதன்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.
படகு விபத்துக்குள்ளான போது கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும், மேலதிக சட்டம் நடவடிக்கைக்காக, காரைநகர் கடற்படையினரால் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago