Niroshini / 2021 மே 12 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
நாடு பூராகவும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக, யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு, இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில், இராணுவத்தின் 512ஆவது பிரிகெட் இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது
யாழ். நகரில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்இ கஸ்தூரியார் வீதிஇ மின்சார நிலைய வீதிஇ ஆஸ்பத்திரி வீதி ஆகிய வீதிகள் இன்று காலை ராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்துவிசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது
யாழ். மாவட்டத்தில், அண்மைய நாட்களில் தொட்டு பெறவில்லை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் ராணுவத்தினரால் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago