Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பகுதியிலுள்ள 7ஆவது விஜயபாகு காலல்படையணி இராணுவ முகாமில் திங்கட்கிழமை (14) இரும்பு வெட்டும் இயந்திரத்தின் சக்கரம் தலையில் வெட்டியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் மாவத்தேகம பகுதியைச் சேர்ந்த எஸ்.பெரேரா (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கட்டட உருக்கு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, இரும்பு வெட்டும் இயந்திரத்தின் சக்கரம் கழன்று இவரின் தலையில் பலமாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த இவரை ஊறணி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது, இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago