Niroshini / 2021 ஜூலை 01 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பருத்தித்துறை - தும்பளை பகுதியில், உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானநிலையில், இறந்தவரின் இறுதிச் சடங்குக்குச் சென்றவர்கள், அவரவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை - தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவர், நேற்று முன்தினம் (29) அதிகாலை வீட்டில் வைத்து, திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புத் தொடர்பில் கேள்வியுற்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அங்கு சென்று,
உயிரிழந்தவரின் சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன், வீட்டிலிருந்தவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்க்கான மாதிரிகளைப் பெற்றனர்.
அதன் பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் மற்றும் அவரது குடும்பத்தில் மூவருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நேற்று முன்தினம் காலை இறுதிச் சடங்குக்குச் சென்றவர்கள், அவரவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிமுறைகளுக்கமைய மின் தகனம் செய்யப்பட்டது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025