2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கைக்குக் கடத்த இருந்த 500 கிலோ கிராம் மஞ்சள் மூட்டைகளை, இராமேஸ்வரம் கடல் பகுதியில் வைத்து படகுடன் இன்று (20) அதிகாலை இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வேதாளைப் பகுதியைச் சேர்ந்த மூவரைக் கைது செய்து, இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஸ்கோடி, மரைக்காயர்பட்டிணம், கீழக்கரைப் பகுதிகளில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .