2026 மார்ச் 21, சனிக்கிழமை

உயிரிழந்த பணியாளருக்கு மாரடைப்பு

Niroshini   / 2020 நவம்பர் 25 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில், நேற்று (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட பணியாளர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரான சட்ட மருத்துவ அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது - 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .