2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

உலருணவுப் பொதிகள் விநியோகம்

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 100 குடும்பங்களுக்கு நேற்று முன்தினம் (14) உலருணவுப் பொதிகளை நாவாந்துறை, பழம் வீதி ஆகிய பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்த்
தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதியை அமரர் பொ. பரமேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமதி பராசக்தி பரமேஸ்வரன் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X