2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிய எல்லைகள் நிர்ணயிப்பது தொடர்பான கலந்துரையாடல்

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

உள்ளுராட்சி மன்றங்களின் புதிய எல்லைகள் மற்றும் வட்டாரங்களை உருவாக்குதலுக்கான முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல், எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வலிகாமம் தெற்கு (உடுவில்), ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாவை, அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சென்ற ஆட்சியில் உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள் மற்றும் எல்லைகளை நிர்ணயம் செய்யும் பொருட்டு, மத்திய உள்ளுராட்சி அமைச்சினால் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தமையை அறிவீர்கள். அக்குழுவின் அறிவித்தலின்படி அரசுத்துறை அதிகாரிகளால் உள்ளுர் ஆட்சியிலிருந்தோர் மற்றும் பொது அமைப்புக்கள் என்போரிடம் கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன.

இருப்பினும், ஆட்சியிலிருந்தோரினதும், அரச அதிகாரிகளனதும் பக்கச்சார்பான முடிவுகளினடிப்படையிலேயே வட்டாரங்களும் எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்களிலிருந்தன.

இப்பொழுது ஆட்சி மாற்றத்தின் பின் அரசு உள்ளுராட்சி அமைச்சினால் மேற்படி விடயந் தொடர்பில் மேற்முறையீடுகளைப் பரிசீலிப்பதற்கும, பரிந்துரைகளைச் செய்வதற்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரதேசங்களில் மேற்படி விடயந் தொடர்பில் தங்கள் தீர்மானங்கள் மேன்முறையீடுகள் சம்பந்தமாகக் கருத்தறியும் பொருட்டு ஒரு கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   அக்கருத்துக்கள் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியுள்ளது என இந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .