Freelancer / 2022 ஜூலை 11 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து தமிழ்மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தக்கதீர்வை முன்வையுங்கள் என தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“சகல தமிழ் கட்சிகளும் குறிப்பாக, பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய அரசியல் சூழலில் நாம் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வாருங்கள்.
வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு தமிழ் அக்கத்தவர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது.
எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள். இது காலத்தின் கட்டாயம். இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்களானால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.
ஆட்சியைத் தீர்மானிக்கப் போகும் எவருடனும் பெறுமதியான தீர்மானத்தை முன் வைப்பதற்கு ஒன்று கூடுங்கள். இன்று நீங்கள் ஒன்றுபடாவிடில் என்றும் உங்களால் பயன் கிட்டுவது எளிதல்ல.
தமிழ் மக்கள் சார்பில் எந்த அரசியலும் இல்லாத பொது மகனாக இவ்வேண்டுகோளை விடுகிறேன்” என்றார். (R)
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026