Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
ஒரு குடையின் கீழ், சைவ அமைப்புகள் இயங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா - கோவிற்குளம் சிவன் கோவிலில், இலங்கையின் தென் மேல், மலையகம், கிழக்கு, வன்னி, யாழ்ப்பாணம் என அனைத்து பிராந்தியங்களில் இருந்தும் வருகைதந்து கலந்துகொண்ட கூட்டமொன்று, ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.
இதன்போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்போது, யாப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. குருபீடமாக சைவ சித்தாந்த ஆதீனங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
சைவ அமைப்புகள் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சைவத் தமிழ் மறுமலர்ச்சியை தொலைநோக்கமாகக் கொண்டு, பின்வரும் குறிக்கோள்களில் செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
1. சைவத் திருக்கோவில்களிர் 'கோவில் சமூக மையம்' எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்தவும் பிணக்குகளை சுமூகமாக தீர்க்கவும் பொது ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்கவும் சகல தளங்களிலும் உழைத்தல்.
2. சைவ அமைப்புக்கள் தங்கள் சுயாதீனத்தை பேணியவாறே பொது வேலைத்திட்டத்தை பிரதேச / பிராந்திய / அகில இலங்கை ரீதியில் முன்னெடுக்கும் வகையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல்.
3. தமிழ் சைவர்களின் ஆன்மீக, வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு உழைத்தல்.
4. தமிழ் சைவத்துடன் தொடர்புபட்ட கலைகளான பரதம், பண்ணிசை, கூத்து, யோகாசனம், சித்த மருத்துவம், இயற்கை விவசாயம் என்பவற்றின் வளர்ச்சியில் பங்காற்றல்.
5. தமிழ்ச் சைவர்களின் பக்தி கருவூலங்களான பன்னிரு திருமுறைகள், பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள் என்பவற்றை பக்தி இயக்கமாக சமூகத்தின் சகல தளங்களிற்கும் எடுத்து செல்லல்.
6. சைவச் சிறார்களின் அறநெறி மேம்பாட்டுக்கு உதவுதலும் இலங்கை பூராகவும் உள்ள சைவ சிறார் இல்லங்களின் வளர்ச்சியில் பங்களித்தலும்.
7. நலிவுற்ற விசேட தேவைப்பாடுடைய மக்களின் வாழ்வியல், மருத்துவ கல்வி போசாக்கு நடவடிக்கைகளில் உதவும் வகையில் சைவ அறப்பணி நிதியத்தை உருவாக்கலும் ஏற்கனவே அமைப்புகள் ஆலயங்களினால் முன்னெடுக்கப்படுவற்றை வலுப்படுத்தலும்.
8. தமிழ் சைவர்களின் பூர்வீக தொல்லியல் மரபுரிமைகளை உறுதி செய்தலும் பாதுகாத்தலும்.
9. தமிழ் சைவர்களின் தார்மீக உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் உறுதி செய்யவும் உழைத்தல்.
10. சைவத்தமிழ் மறுமலர்ச்சிக்கு தேவையான சகல வேலைத்திட்டங்களையும் ஒன்றிணைந்த கட்டமைப்பாக முன்னெடுத்தல் என்பனவாகும்.
மேலும், ஆராய்வுகள் பிரதி வெள்ளி தோறும் இரவு 9 - 9.40 வரை நடைபெறும். இதன்போது, நிகழ்நிலை கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டு முன்னுரிமை விடயதான பிராந்திய பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4 minute ago
18 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
29 minute ago
40 minute ago