2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கச்சதீவு திருவிழாவின் திருப்பலி நிகழ்வு

Freelancer   / 2022 மார்ச் 12 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம் - கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி  நிகழ்வு  இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நேற்று கொடியேற்றத்தை அடுத்து  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.

இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

மேலும் இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந் நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் விஜேகுணரட்ண, யாழிற்க்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன், நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி மற்றும் மதகுருமார்கள், கடற்படை இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X