Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
நீர்வேலி - கரந்தன் சந்திப் பகுதியில், நேற்று தினம் (17), கஞ்சா நுகர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன், கந்தரோடை - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவரெனப் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனின் உடமையில் இருந்து 650 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
விசேட ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நின்ற இளைஞனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது, உடைமையில் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago