2021 மே 17, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் பெண் உட்பட இருவர் கைது

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பலாலி தெற்கு கம்பாவத்தைப் பகுதியில் 3 சிறு பொதிகளில் கஞ்சாவை வைத்திருந்த 23 வயதுடைய பெண் மற்றும் 53 வயதுடைய ஆணொருவர் ஆகியோர் புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பாவத்தை பகுதியில் வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த ஒருவரை விசாரணை செய்ய முற்பட்ட போது, அவர் தன் வசம் வைத்திருந்த பொருள் ஒன்றை அருகில் நின்றிருந்த யுவதியிடம் கொடுத்துள்ளார்.

பொலிஸார் அதனை வாங்கிப் பார்த்த போது, அதற்குள் 3 சரைகளில் கஞ்சா இருந்துள்ளது. இருவரையும் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .