Princiya Dixci / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ், எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத்
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (29) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago