Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எம். ஏ. சுமந்திரன் வந்த பின்னரே, அக்கட்சிக்குள் இருந்த அங்கத்துவக் கட்சிகள் சீர்குலைந்ததாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரன் என்பவர் எங்கிருந்தோ வந்து, திடீரென்று கூட்டமைப்பின் நுழைந்தாரெனவும் அதன் பின்னர் மாவை சேனாதிராஜா தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டாரெனவும் கூறினார்.
தலைமைப் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்லவெனத் தெரிவித்த அவர், அதை சரியாக வழிநடத்த தெரியாத ஒருவர்தான், தலைமைப் பதவி வகிக்கின்றாரெனவும் குற்றஞ்சாட்டினார்.
ஆரம்பகாலத்தில், அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டணியில் இருந்து செய்யப்பட்டனரென, சுமந்திரன் கூறியிருப்பதாகவும் ஆனால், வரலாறு தெரியாதவர்கள், மீண்டும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இப்போது கோரிக்கையை முன்வைக்கிறார்களெனவும், ஆனந்தசங்கரி கூறினார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago