Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
துக்கதினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, கறுப்புக் கொடிகளைக் கட்டுவதற்கு, நெல்லியடி பொலிஸார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும், நெல்லியடி பகுதிகளில், நேற்று (23) சோக கீதங்கள் இசைக்கப்பட்டு, கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன.
இதன்போது அங்கு வந்த நெல்லியடி பொலிஸார், கறுப்புக் கொடிகளை கட்ட வேண்டாமெனவும் இவ்வாறு கறுப்புக் கொடிகளைக் கட்டுவது அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவது போன்று அமையுமெனவும் கூறினர்.
எனவே, கறுப்புக் கொடிகளைக் கட்ட வேண்டாமெனவும் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைக் கொடிகளைக் கட்டுமாறு, பொலிஸார் கோரினர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கறுப்புக் கொடிகளை அகற்றி விட்டு வெள்ளைக் கொடிகளை கட்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago