2025 மே 03, சனிக்கிழமை

கல்லுண்டாய் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Niroshini   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ் தில்லைநாதன்

 

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள், நீண்ட நாள்களாக எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக, குறித்த பகுதியில் RO Plant  அமைப்பதற்குரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், தொடர்ச்சியாக கவனத்தை செலுத்தி வந்த நிலையில், கல்லுண்டாய் பகுதியில், RO Plant  அமைப்பதற்கான அறிவிப்பு, சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தீவகத்துக்கான குடிநீர் விநியோக வலையமைப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலணை பிரதேசத்தில் அமைக்கப்படவிருந்த RO Plant இயந்திரங்களை, கல்லுண்டாய் பகுதியில் அமைப்பதென, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில், சுகாதார அமைச்சிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து, RO Plant  நிறுவுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, கடற்படைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X