2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

Janu   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - மயாலங்காடு, ஏழாலை பகுதியில் வசித்து வந்த 51 வயதுடை ஆணொருவர் ஞாயிற்றுக்கிழமை (24) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஆறுமுகம் துரைராசா என்பவர் ஞாயிற்றுக்கிழமை (24) வீட்டில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு திரும்பி வராத நிலையில் அவரை தேடிச் சென்றபோது, அவர் தோட்டக் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பு.கஜிந்தன்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X