Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் சேவையை முன்னெடுக்க முடியாது தரித்து நிற்கும் குமுதினி படகை, மீள் திருத்தம் செய்து, விரைவில் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவுக்கு, நேற்று (04) விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள், குறித்த பிரதேசத்தில் உள்ள சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இதன்போதே, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் சேவையை முன்னெடுக்க முடியாது தரித்து நிற்கும் குமுதினி படகை, மீள் திருத்தம் செய்து தருமாறு அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பிரதிநிதிகளுடாக கோரிக்கை விடுக்கப்பட்டத.
இவ்விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அலைபேசியூடாக தெரியப்படுத்தப்பட்டது.
இதன் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
30 minute ago