2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குருபூசை தினமும் ஊடகவியலாளர் கௌரவிப்பும்

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115ஆவது குருபூசை தினமும், ஊடகவியலாளர் சி.திலலைநாதன் கௌரவிப்பு நிகழ்வும் சதாவதானி சன சமூக நிலையத்தில், நேற்று (16) மாலை நடைபெற்றது.

மேலைப் புலோலி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை சன சமூக நிலையத் தலைவர் நடராசா நிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வே.வேல்நந்தன் உரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து 54 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகப் பணியாற்றிய ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் மலர் மாலை அணிவிக்கப்பட்டும், பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சதாவதானி கதிரவேற்பிள்ளை  சன சமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்பள்ளி சமூகம் மற்றும் மேலைப்புலோலி கிராம மக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .