2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘குறைந்த கல்வித் தகமையுடையவர்களுக்கான அரச நியமனத்தில் சந்தேகம்’

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு நியமனம் வழங்குவதென அமைச்சரவை வழங்கியுள்ள அங்கிகரமானது, தங்களைச் சந்தேகங்கொள்ள வைப்பதாக, வடமாகாண வேலையற்றப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் சபாபதிபிள்ளை சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று (19) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், க.பொ.த சாதாரணத் தரத்துக்கும் குறைவான கல்வித் தகமையுடைய 1 இலட்சம் பேருக்கு அரச வேலைவாய்ப்பை வழங்குவதென, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டமையானது, வேலையற்ற பட்டதாரிகளை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வடமாகாணத்தில் மாத்திரமன்றி, அகில இலங்கை ரீதியாக ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள் காணப்படும் நிலையில், தங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தவொரு தீர்வையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லையெனவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .