Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
புளொட் அமைப்பு மீது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாமலேயே, அக்கட்சியின் தலைவர் வேறு வேறு வியாக்கியானங்களை வெளியிடுவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.
வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் நேற்று முன்தினம் (12) மாலை நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைற்றிய அவர், புளொட் அமைப்பு தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் தாங்கள் முன்வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
அதாவது, தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தயாரித்து, தமிழ் மக்கள் பேரவை முன்வைத்திருந்ததாகவும் அந்தப் பேரவையில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அந்தப் பேரவை முன்வைத்த தீர்வுத் திட்டத்துக்கு மாறாக, ஒற்றையாட்சியை ஆதரிக்கின்ற அல்லது ஏற்றுக் கொள்கின்ற செயற்பாட்டுக்குள் புளொட் அமைப்பு போயிருந்ததை தாங்கள் பகிரங்கப்படுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அவர்களால் பதிலளிக்க முடியாதென, அவர் மேலும் கூறினார்.
20 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago