2025 மே 09, வெள்ளிக்கிழமை

’குற்றச்செயல்கள் இடம்பெற்றால் அறிவிக்கவும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

வன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக தகவல் வழங்குமாறு, யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரில், இன்றைய தினம் திறந்திருந்த கடைகளின் உரிமையாளர்களை, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஷான் பெர்ணான்டோ, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி - பெருமாள் கோவிலடியில் வைத்து, அண்மையில் “தனுரொக்” என்று அழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவொன்று, இளைஞன் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றால், உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பு, சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X