Editorial / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், என்.ராஜ்
யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிப தம்பதியை கட்டி வைத்து சித்திரவதை புரிந்ததில், வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
தென்மராட்சி, அல்லாரையில் பகுதியில் நேற்று (11) நள்ளிரவு இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் சிவராசா (வயது 72) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயோதிபத் தம்பதி வசிக்கும் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை புகுந்த மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல், அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தி, பணம், நகை என்பவற்றைக் கேட்டுள்ளனர். அதில் வயோதிபரின் கழுத்தை நெரித்ததில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
அதனை அடுத்து வீட்டிலிருந்த ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டுக் கும்பல் தப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
9 hours ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Mar 2026
20 Mar 2026