2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளை: பிரதான சந்தேகநபர் கைது

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

தெல்லிப்பளை - கட்டுவான் பகுதியில், அண்மையில், அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி, அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், தெல்லிப்பளை - வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரென, தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X