2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கோப்பாயில் கோர விபத்து

Freelancer   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து, 100 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற பெண் வீதியில் விழுந்த நிலையில், டிப்பர் சில்லு அவருடைய தலையில் ஏறியதில், தலை  நசுங்கியதில் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்துள்ளார்.

விபத்தில் கணவன் சிறுகாயங்களுடன் தப்பிய நிலையில், மனைவி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X