2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘சட்ட மூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் ‘

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

‘இழுவைப்படகு தொழிலை நிறுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்தாரத்தை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென’ கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமராட்சி மற்றும் நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

‘வடமாகாணத்தில் 40 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சம் கடற்றொழிலாளர்கள் வாழ்கின்றனர். சிறு எண்ணிக்கையைக்கொண்ட இழுவைப்படகு  தொழிலாளர்களால், மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றோம். எமது அடுத்த சந்ததியினருக்கு எதைக்கொடுக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு இழுவைப்படகு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தும் தற்போதும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்ளப்படுகின்றமையால், இழுவைப்படகு தொழில் சட்டரீதியாக நிறுத்தப்பட்டுள்ளதா? இல்லையா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது.

யாழ்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக கடல்வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் சுரண்டப்பட்டு, அன்றாடம் வாழ முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இழுவைபடகு, டைனமேட் மற்றும் குழை இட்டு மீன்பிடித்தல் முறைகளால் நாம், மிகவும் பாதிப்படைவதுடன், சர்வாதிகாரமான முறையில் அட்டை பிடிக்கும் தொழிலையும் மேற்கொள்கின்றனர்.

சட்டவிரோத இழுவைப்படகு தொழிலை மேற்கொள்வோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வதாரத்துக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .